பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
முதலமைச்சர் கோப்பைக்கான தடகளம் போட்டிகள், ஹாக்கி, கபாடி, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், இறகு பந்து போட்டிகள் 20.11.2015 மற்றும் 21.11.2014 ஆகிய தினங்களில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்தப்படவுள்ளது.
100 மீ, 800மீ, 5000மீ, ஓட்டப்போட்டிகள், 110 மீ தடை தாண்டும் போட்டிகள் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், மும்முறை தாண்டுதல், மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளது. பெண்களுக்க 100 மீ, 400மீ, 3000மீ, ஓட்டப்போட்டிகள், 100 மீ தடை தாண்டும் போட்டிகள் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், மும்முறை தாண்டுதல், மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் 20.11.2015 அன்று காலை 8.20 மணி முதல் நடைபெறும்.
குழு விளையாட்டுப்போட்டிகள் 21.11.2015 அன்று காலை 8.30 மணியளவில் நடைபெறும். குழப்போட்டிகளில் கூடைப்பந்து, கையுந்து பந்து, கால் பந்து, கைப்பந்து நீச்சல்; ஆகிய போட்டிகள் ஆண், பெண் இருபாலாருக்கும் தனித் தனிப் பிரிவுகளில் நடத்தப்படும். நீச்சல் போட்டிகளில் 50 மீ, 100மீ, 200மீ, 400மீ, ப்ரீ ஸ்டைல், 50மீ பேக் ஸ்ட்ரோக், 50மீ ப்ரஸ்ட் ஸ்ட்ரோக், 50மீ பட்டா;ப்ளை ஸ்ட்ரோக் மற்றும் 200மீ இன்டிவிஜூவல் மெட்லே. ஆகிய போட்டிகள் ஆண், பெண் இருபாலாருக்கும் தனித் தனிப் பிரிவுகளில் நடத்தப்படும்.
இப்போட்டிகளில் கலந்து கொள்பவா;கள் 31.12.2015 அன்று 25 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். 01.01.1991 அன்றோ அல்லது அதற்கு பின்னா; பிறந்தவா;களாக இருத்தல் வேண்டும். இதற்கான சான்றிதழ்கள் சமா;ப்பிக்கப்பட வேண்டும்.
மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி முதல் இடம் பெறும் விளையாட்டு வீரா;கள் மற்றும் வீராங்கணைகள் மட்டும் தோ;ந்தெடுக்கப்பட்டு மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவாh;கள். மாநில அளவிலான முதலமைச்சா; கோப்பைக்கான தனிநபா; மற்றும் குழுப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறும் அணிவீரா; மற்றும் வீராங்கணைகளுக்கு தலா ரூ.1ஃ- இலட்சம், ரூ.75,000ஃ- ரூ.50,000 மும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
மாவட்ட அளவிலான குழுப்போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழ்நாட்டில் குறைந்தது 5 வருடங்களாவது வசித்து வருவதற்கான புகைப்படத்துடன் கூடிய சான்றினை குடும்ப அடையாள அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை , ஓட்டுநர் உரிமம் பள்ளி மதிப்பெண் பட்டியல் அல்லது பள்ளி மாற்றுச் சான்றிதழ் இவைகளில் ஏதேனும் ஒன்றை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் போட்டியில் கலந்து கொள்ளும் முன் ஒப்படைக்க வேண்டும்.
போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் மற்றும் வீராங்கணைகளுக்கு முதல் பரிசு ரூ.1000- , இரண்டாம் பரிசு ரூ.750-, மூன்றாம் பரிசு ரூ.500ம் வழங்கப்படும். எனவே மாவட்ட அளவிலான போட்டிகளில் அதிக அளவில் வீரர் மற்றும் வீராங்கணைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.