பெரம்பலூர் : ஆலத்தூர் வட்டம், காரை அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 76 நபர்களுக்கும், கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 139 நபர்களுக்கும், கூத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 27 நபர்களுக்கும் என மொத்தம் 242 நபர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க இயக்குநர் கர்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் (பொ) ஜெயராமன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் சுசீலா(காரை), ரவிக்குமார் (கொளக்காநத்தம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.