பெரம்பலூர் மாவட்டத்தில் 3 லட்த்து 48 ஆயிரத்து 332 நபர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் விலையில்லா வேஷ்டி சேலைகள் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது தெரிவித்தார்.
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்கு விலையில்லா வேஷ்டி சேலைகளை வழங்கி வருகிறது. இன்று தமிழக அரசின் விலையில்லா வேஷ்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் நகராட்சி பகுதியில் உள்ள துறைமங்கலம் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடையில் நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் வட்டத்தில் 37 ஆயிரத்து 872 வேஷ்டிகளும், 38 ஆயிரத்து 595 சேலைகளும், வேப்பந்தட்டை வட்டத்தில் 39 ஆயிரத்து 481 வேஷ்டிகளும், 40 ஆயிரத்து 425 சேலைகளும், குன்னம் வட்டத்தில் 40 ஆயிரத்து 592 வேஷ்டிகளும், 41 ஆயிரத்து 434 சேலைகளும், ஆலத்தூர் வட்டத்தில் 29 ஆயிரத்து 478 வேஷ்டிகளும், 30ஆயிரத்து 153 சேலைகளும் வழங்கப்பட உள்ளன.
மேலும் முதியோர் ஓய்வூதியம் பெறுவர்களில் 18 ஆயிரத்து 441 வேஷ்டிகளும், 31 ஆயிரத்து 861 சேலைகளும் என மொத்தம் பெரம்பலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 65 ஆயரத்து 864 நபர்களுக்கு விலையில்லா வேட்டிகளும், 1 லட்சத்து 82 ஆயிரத்து 468 நபர்களுக்கு விலையில்லா சேலைகளும் 3 லட்சத்து 48 ஆயிரத்து 332 நபர்களுக்கு வழங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகள், அரசு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.