பெரம்பலூர் மாவட்டத்தில் அரணனாரை மற்றும் குரும்பலூரில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு திட்டமான இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 4,569 இல்லத்தரசிகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் மருதராஜா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் ஆகியோர் வழங்கினர்
தமிழக முதலமைச்சர் தமிழக அரசின் சிறப்புத்திட்டங்களை செம்மையோடு, விரைந்து செயல்படுத்தவும், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மக்களை விரைவில் சென்றடையும் வகையில் “சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை” எனும் பெயரில் புதிய துறையை தொடங்கினார்கள்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி, மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மாணவர்கள் தொடர்ந்து 12 ஆம் வகுப்பு வரை கல்விகற்க ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், கிராமப்புற ஏழை மக்களின பொருளாதாரத்தை பெருக்க ஆடுகள் வழங்கும் திட்டம், பால் உற்பத்தியை பெருக்க கறவைமாடுகள் வழங்கும் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி அந்த திட்டங்களின் பயனை மக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளார்கள்.
இன்று பெரம்பலூர் வட்டத்திற்குட்ப்பட்ட அரணாரையில் 787 இல்லத்தரசிகளுக்கும், குரும்பலூரில் 3782 இல்லத்தரசிகளுக்கும் என மொத்தம் 4,569 இல்லத்தரசிகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை பெரம்பலூர; பாராளுமன்ற உறுப்பினர் மருதராஜா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுதலைவர் சகுந்தலாகோவிந்தன், நகராட்சித்தலைவர் இரமேஷ், மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைதலைவர் சேகர், நகராட்சி துணைத் தலைவர் ஆர்.டி.ராமசந்திரன், ஆலத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் வெண்ணிலாராஜா, சிறப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் (பொ) ராமசாமி, வட்டாச்சியர்கள் செல்வராஜ், தமிழரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.