பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்ற 680 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு சுமார் ரூ.68 ஆயிரம் வரையில் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த1ம் தேதியில் இருந்து கட்டாய ஹெல்மெட் சட்டம் முழுவதுமாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனை அமுல்படுத்துவதில் போலீசார் மிகவும் கடுமையாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாகவே போலீசார் கெடுபிடி காரணமாக எங்கும் ஹெல்மெட் மயமாகவே காட்சியளிக்கின்றன.
இதனால் சுமார் 90சதவீத டூவீலர் பயணிகள் ஹெல்மெட்களை அணியத் துவங்கியுள்ளனர்.
இதில் கடந்த 5நாட்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் சென்ற 680 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களிடம் இருந்து ரூ.68 ஆயிரம் வரை அபராதமாகவும் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் போலீசாரின் கிடுக்கிபிடியில் இருந்து ஹெல்மெட் அணியாமல் வந்து தப்பிசெல்லும் நபர்களை பிடிக்க போலீசார் இளைஞர் சிறப்பு காவல் படையினர், ஹோம்கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.