ஆறு மாத காலமாக வாடகை தராமலும், காலி செய்யாமலும் இருந்த ரேசன் கடைக்கு கட்டிடத்தின் உரிமையாளர் பூட்டு போட்டார்.
பெரம்பலூர். புதிய மதன கோபலாபுரம், ரோவர் பள்ளிக்கு வடக்கு பகுதியில் கூட்டுறவு துறைக்கு சொந்தமான ரேசன் கடை அப்பகுதியில் பாண்டியன் குடும்பத்தினருக்கு சொந்தமான கட்டிடத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது.
அதற்கு தொடர்ந்து வாடகை ஒப்பந்த அடிப்படையில் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், 2014 ஆண்டுக்கு பின்னர் ஒப்பந்தத்தை புதுப்பிக்கப்படாமல் கடந்த 7 மாதமாக கடை அந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
கட்டிட உரிமையாளர் கடைக்கு புதிய ஒப்பந்தமிட்டு வாடகை அளிக்க வேண்டும், அல்லது ரேசன் வெறு ஒரு இடத்திற்கு மாற்றிக் கொள்ள தெரிவித்துள்ளார்.
ஆனால், கூட்டுறவு சங்க நிர்வாகம் இதனை கண்டு கொள்ளமல் தொடர்ந்து செயல்பட்டு வந்ததையடுத்து கட்டிட உரிமையாளர் இன்று காலை ரேசன் கடைக்கு பூட்டுப் போட்டார்.
இதனை அறிந்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ரேசன் கடைக்கு சென்று கட்டிட உரிமையாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில் கட்டிட உரிமையாளர் பூட்டை திறந்து விட்டார்.