பெரம்பலூர்: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க பெரம்பலூர் மாவட்ட பேரவை கூட்டம் துறைமங்கலம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட அமைப்பாளர் பி.ரமேஷ் தலைமை வகித்தார். சி.பி.எம்., வட்ட செயலாளர் (பொ) எஸ்.பி.டி.ராஜாங்கம் மற்றும் சுபா.தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜி.மணி சிறப்புரை ஆற்றினார். மாநில துணைசெயலாளர் எஸ்.சந்திரன், மாவட்ட செயலாளர்கள் எம்.இளங்கோவன் விவசாயிகள் சங்கம் என்.செல்லதுரை, சிஐடியு ஆர்.அழகர்சாமி, மாதர் சங்கம் எ.கலையரசி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
60 வயதை நிறைவடைந்த விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் நிபந்தனையின்றி முதியோர் உதவி தொகை வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்ததை 200 நாட்களாக உயர்த்தி 300 ரூபாய் கூலி வழங்க வேண்டும்,
பெரம்பலூரில் அரசு மருத்துவக்கல்லூரி வேளாண்கல்லூரி கால்நடைக்கல்லூரி துவங்க வேண்டும், வீடற்ற விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் இலவசமாக 3 செண்ட் வீட்டுமனை பட்டா வழங்கி தொகுப்பு வீடு கட்டிதர அரசு முன் வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பேரவை நடைபெற்றது. பின்னர் புதிய நிர்வாகிகளாக மாவட்ட தலைவர் வி.காமராஜ், மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், பொருளாளர் கே.ராஜேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்களாக ராஜகோபால், கண்ணம்மாள், கலைவாணி, சாரதா, பூமாலை, கோவிந்தன், துரை, பாலகிருஷ்ணன், சையத் இப்ராஹீம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் கே.ராஜேந்திரன் நன்றி கூறினார்.