co_op_annul_pblr
பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவுத் துறைத் துறையின் சார்பில் 62 வது அகில இந்தியக்கூட்டுறவு வார விழா சங்கு அருகே இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கத்தில் பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் எஸ்.ஆர்.ஜமால் முகமது கூட்டுறவு உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் அவரைத் தொடர்ந்து உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர், இவ்விழாவில் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் பேசியதாவது:

தமிழக முதலமைச்சரின் ஆட்சியில்தான் கூட்டுறவுத்துறை புத்துயிர் பெற்று சிறப்பாக செயல்படத் தொடங்கியது. இத்துறையின் மூலம் முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க எண்ணற்ற கடனுதவிகள், நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, கூட்டுறவே நாட்டுயர்வு என்ற பொன்மொழிகளுக்கேற்ப விவசாயப் பெருங்குடி மக்களின் நலனில் மிகுந்த அக்கரை எடுத்து எண்ணற்ற பல நல்ல திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகின்றது.

2012-2013 ஆம் ஆண்டில் 4ஆயிரம் கோடியும், 2013-2014ஆம் ஆண்டில் 4,500 கோடியும், 2014-2015 ஆம் ஆண்டிலே ரூ.5,000 கோடியும் பயிர்க்கடனாக வழங்கிய தமிழக முதலமைச்சர் விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நடப்பாண்டில் ரூ.5,500 கோடி பயிர்க்கடன் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், விவசாயத்தில் வெளிநாட்டுத் தொழில்நுட்கள் குறித்து அறிந்து அதை நமது நாட்டிலும் செயல்படுத்தும் விதமாக 100 விவசாயிகள் தேர;ந்தெடுக்கப்பட்டு இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அழைத்துச்செல்லப்படவுள்ளனர்.

இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் உள்ள வேளாண் தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ளும் வகையில் 1000 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிற மாநிலங்களுக்கு அழைத்துச்செல்ல தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது ஏழை, எளிய மக்களுக்குப் பயன்படும் வகையில் கூட்டுறவுத் துறையின் சார்பில் அம்மா மருந்தகங்கள் தமிழ்நாடு முழுவதும் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் வட்டியில்லா பயிர்க்கடனாக ரூ.414.63 கோடியும், முதலீட்டுக்கடனாக ரூ.123.72 கோடியும், நகைக்கடனாக ரூ.795.03 கோடியும், சுய உதவிக் குழுக்கடன்களாக ரூ.31.29 கோடியும், டாப்செட்கோ கடனுதவியாக ரூ.4.39 கோடியும், டாம்கோ கடனுதவியாக ரூ.1.54 கோடியும், தானிய ஈட்டுக் கடனுதவியாக ரூ.37.43 கோடியும் ஆகமொத்தம் 1,408.03 கோடி கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே ஊட்டி தேயிலை விற்பனையில் பெரம்பலுhர; மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது பாராட்டத்தக்கதாகும்.

பெரம்பலூர் மாவட்டத்தினை தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றமடையச்செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் கிராமத்தில், சுமார; 22 ஏக்கர; நிலப்பரப்பளவில், நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட 36 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பால் பண்ணை கட்ட திட்டமிடப்பட்டு கட்டடப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றது. பால் கூட்டுறவு சங்க உறுப்பினர;கள் அதிக அளவில் பால் உற்பத்தி செய்து பயன்பெற இத்திட்டம் வழிவகுக்கும்.

நடப்பாண்டில் பெரம்பலுhர; மாவட்டத்தில் 4 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அலுவலகக் கட்டடம் கட்ட அரசு அனுமதி வழங்கியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 282 நியாய விலைக்கடைகள் மூலமாக 1,69,540 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி ஒவ்வொரு மாதமும் 2,411 டன் வழங்கப்படுகின்றது.

இதுபோன்று ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் விதமாக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகின்றது. இதனை பொதுமக்கள் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

பின்னர; கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளிடையே நடத்தப்பட்ட கலை,இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், 6 வேளாண்மைக் கூட்டுறவுச்சங்கங்களைச் சேர்ந்த கூட்டமைப்புகள், சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவியாக ரூ.1கோடியே 48 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகளையும், சிறந்த முறையில் செயல்பட்ட 29 கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்களுக்கும், சிறப்பு விநியோகத்திட்ட அங்காடி விற்பனையாளர்கள் 4 நபர்களுக்கும், அதிக அளவில் ஊட்டி டீத்தூள் விற்பனை செய்த 4 விற்பனையாளர்களுக்கும் வீட்டுவசதி, நகர்புறவளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் நினைவுக்கேடயங்களை வழங்கி வாழ்த்தினார். முன்னதாக கூட்டுறவுக்கான கொடியினையும் மாண்புமிகு அமைச்சர் ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.பி.மருதராஜா (பெரம்பலூர்), மா.சந்திரகாசி(சிதம்பரம்), பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன், நகர்மன்றத் துணைத்தலைவர் ஆர்.டி.இராமச்சந்திரன், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் டி.ராமு, திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர்அயிலை.பி.பழனியாண்டி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சகுந்தலா கோவிந்தன், துணைத்தலைவர் ந.சேகர், ஊராட்சி கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவ.முத்துக்குமாரசாமி, உள்ளிட்ட அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!