Do not play with state high officials and politicians in court: Judges warn

கரூரில் புதிய பேருந்து நிலை ய ம் அ மை ப் ப து தொடர்பாக 2 0 1 7 ம் ஆண்டு அர சு ஒ ரு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பலரும் வழக்கு தொடர்ந்தன ர் . இ ந் த மனுக்களை விசாரி த் த உயர்நீதிமன்ற மதுரை கிளை, அரசு நிர்ணயித்த அந்த இடத்தில், பேருந்து நிலையம் கட்டுவதற்கு எந்த தடையும் இல்லை; பேருந்து நிலையம் கட்டலாம் எ ன் று உத்தர வு பிறப்பித்தது.
இந்த நிலையில், உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும், கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க, அரசு இதுவரை எ ந் த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கரூரைச் சேர்ந்த சரவணன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு, இன்று (9ம் தேதி) வி சாரணைக்கு வந்த போது, கரூர் நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ஹர்மந்தர் சிங் நேரில் ஆஜராகி இருந்தார்.
அப்போ து , க ட ந் த இரண்டு ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஏன் பேருந்து நிலையம் அமைக்கவில்லை’ என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, “அதைவிட சிறப்பாக மற்றொரு இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளோம்,” என, ஹர்மந்தர் சிங் பதிலளித்தார்.
இதனால் கோபமடைந்த நீதிபதிகள் , அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொண்டு தான் வந்துள்ளோம். அரசியல் உள்நோக்கத்துடன் செயல் பட்டு வந்துள்ளது தெளி வாகிறது. 2017ம் ஆண்டு நீ தி ம ன் ற த் தி ல் ஒ ரு வாதத்தை முன் வைத்துள்ளீர்கள். இப்போது மற்றொரு விதமாக பேசுகிறீர்கள். நீதிமன்றத்துடன் இவ்வாறு விளையாடக்
கூடாது. அரசியல்வாதிகளுடன் கை கோர்த்து கொண்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இப்படி நடக்கக் கூடாது.
நீதிமன்ற உத்தரவு முறையாக பின்பற்றப்பட வேண்டும். அரசு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறக்கூடியது. ஆனால், அதிகாரிகள் அப்படி கிடையாது; நிரந்தரமானவர்கள். எனவே, அரசு உயரதிகாரிகள், அரசியல்வாதிகளுடன் சேர்ந்து நீதிமன்றத்துடன் விளையாடக் கூடாது.
அதிகாரிகள், மக்கள் நலனை கருத்தில் கொண்டு, பொறுப்புணர்வுடனும், ”தந்திரமாகவும் செயல்பட வேண்டும். எவ்வித நிபந்தனையும் இன்றி, உயர் நீதி மன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படிதான், கரூர் புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என, பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் . அவ்வாறு செய்யா விட்டால் நீங்கள் நீதிமன்ற அவமதிப்பு உள்ளாக நேரிடும்’ என தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை, வரும் 11ம் ஒத்தி வைத்தனர்.