பெரம்பலுார் ; பெரம்பலுார் அருகே மின்னல்(இடி) தாக்கியதில் தாய், மகன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பெரம்பலுார் மாவட்டத்துக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று மதியம் 1 மணியளவில் மழை பெய்தது. இதன் ஒருபகுதியாக பெரம்பலுார் அருகே உள்ள பாடாலுார் கிராமத்திலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
அப்போது இக்கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த சாமிநாதன் மகன் சிதம்பரம்,49, இவரது தாய் சின்னம்மாள்,74, ஆகிய இருவரும் வயலில் உள்ள மரத்தடியில் நின்றுக்கொண்டிருந்தனர்.
அப்போது மின்னல் தாக்கியதில் சிதம்பரம், சின்னம்மாள் ஆகிய இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து பாடாலுார் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.