பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே தனியார் பள்ளி பேருந்து ஒன்று, இன்று காலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு காரை, தெரணி பகுதியில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்து கொண்ருந்தது.
பள்ளி பேருந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் அருகே உள்ள மலையப்ப நகர் பிரிவு பாதையில் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.. சாலையின் அருகே உள்ள பள்ளித்தில் டிரைவர் சாமார்த்தியமாக நிறுத்தியதால் மாணவர்கள் சிறு சிறு காயங்களுடன் தப்பினர்.
சம்பவ இடததிற்கு வந்த மாணவர்களின் பெறறோர் மற்றும் உறவினர்கள் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டுள்னர்.
போலீசார் சம்ப இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.