Gramma sabha meetings on behalf of DMK in Mohanur near Namakkal

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மோகனூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஆரியூர், பேட்டபாளையம், ராசிபாளையம், புதுப்பட்டி, வளையப்பட்டி, அரூர், அரசநத்தம், லத்துவாடி, பரளி, சின்னபெத்தாம்பட்டி, அணியாபுரம், தோளூர் ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சி சபைக்கூட்டங்கள் நடைபெற்றது.

மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான காந்திசெல்வன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தேர்தல் பணிக்குழு செயலாளர் பார்த்திபன் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இக்கூட்டத்தில் ஒன்றிய பொறுப்பாளர் நவலடி, மாவட்ட அவைத்தலைவர் உடையவர், பேரூராட்சி செயலாளர் செல்லவேல், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் ராமலிங்கம், இளமதி, சுகுமார், துணை அமைப்பாளர் சத்தியபாபு, நவீன், ஊராட்சி செயலாளர்கள் நாகராஜன், சின்னையா, பூவராகவன், ராஜசேகரன், சக்திவேல், முருகேசன், கவுரிசங்கர், ராஜாகண்ணன் உள்ளிட்ட திரளானவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.