Opening ceremony of the new branch in Thuraiyur Aswins Home Special !
பெரம்பலூர் அஸ்வின்ஸ் ஹோம்ஸ்பெஷல் புதிய கிளை துறையூரில் நேற்று திறக்கப்பட்டது.
பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் சுவீட்ஸ் அன்ட் பேக்ரி நிறுவனம் பெரம்பலூர், சென்னை, திருச்சி, கரூர், ஆத்தூர், நாமக்கல், பாண்டிச்சேரி ஆகிய பெருநரகங்களில் செயல்பட்டு வருகிறது.
இதைதொடர்ந்து துறையூரில் திருச்சி ரோடு, தர்மன் பில்டிங், லட்சுமி விலாஸ் பேங்க் அருகில் என்ற முகவரில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவன நிர்வாக இயக்குனர் கணேசன் தலைமை வகித்தார். முன்னாள் யூனியன் சேர்மன் தர்மன் ராஜேந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கதிரவன் பஸ் உரிமையாளர் ரெங்கசாமி ரெட்டியார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
ஸ்ரீ செளடாம்பிகா கல்வி குழும தலைவர் ராமமூர்த்தி முதல் விற்பனையை துவங்கி வைக்க அதனை முன்னாள் நகர்மன்ற தலைவர் முரளி பெற்றுக்கொண்டார்.
விழாவில் ஸ்ரீபாலாஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் துரைராஜ், இன்ஸ்பெக்டர் உதயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழா சலுகையாக ஒரு கிலோ ஸ்வீட் வாங்கினால் அரை கிலோ மிச்சர் இலவசம் அரை கிலே ஸ்வீட் வாங்கினால் கால் கிலோ மிச்சர் இலவச வழங்கப்பட்டது.