Perambalur Collector Office Siege demanding time to repay loans

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் நுண்கடன் வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்த கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்க கோரி, மகளிர் சுய உதவிக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கிழுமத்தூர் பூங்காநகர் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தனியார் நுண்கடன் வழங்கிகளுக்கு எதிராக முழக்கமிட்டனர். தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்திடம் மகளிர் சுய உதவிக்குழுவினர் அளித்த மனுவில் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான நுண்கடன் வங்கிகளில் கிழுமத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏழைஎளிய குடும்பத்தில் உள்ள பெண்கள் வங்கிக் கடன் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், பொது முடக்கத்தால் கடந்த 3 மாதங்களாக கூலி வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்து பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். இந்த நிலையில், வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்துமாறும், அதற்குரிய வட்டிக்கு கூடுதல் வட்டியுடன் செலுத்த வேண்டுமென வங்கியாளர்கள் மற்றும் வங்கிப் பணியாளர்கள் எங்களை வற்புறுத்தி வருகின்றனர். மேலும், வீடுகளுக்கு வரும் வங்கிப் பணியாளர்கள் சிலர் தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர். எனவே வங்கிக் கடனை செலுத்துவதற்கு 6 மாதம் கால அவகாசம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!