Perambalur district can be set up for processing poultry farms

மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

தமிழ்நாடு அரசு கோழிப்பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் “கோழி அபிவிருத்தித் திட்டத்தினை“ ரூ25.00 கோடி செலவில் 2017 – 2018-ம் ஆண்டிற்கு செயல்படுத்த ஆணை வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்திற்கு 10 கறிக்கோழிப் பண்ணைகள் அமைக்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கோழிப்பண்ணை அமைக்க போதிய நிலம் விண்ணப்பதாரர் பெயரிலோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர் பெயரிலோ இருத்தல் வேண்டும். கோழி வளர்ப்பில் முன் அனுபவம் உள்ளவர்களும், கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகள், தனிநபர் தொழில் முனைவோர், சுய உதவிக்குழுக்கள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

பயனாளிகள் தங்கள் சொந்த முதலீட்டில் அல்லது வங்கி மூலம் கடன் பெற்று இத்திட்டத்தின் மூலம் கோழிப்பண்ணை அமைக்கலாம். 5000 கோழிகளுக்கான கறிக்கோழிப் பண்ணை அமைப்பதற்கு கோழிக்கொட்டகை கட்டும் பணி மற்றும் உபகரணங்கள் வாங்க ஆகும் மொத்த செலவில் 25 சதவீதம் மானியம் தமிழக அரசு வழங்குகின்றது.

தோ;வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி மையங்களில் 3 நாட்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும்.

மேற்கூறிய தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் கறிக் கோழிப் பண்ணை ஒருங்கிணைப்பாளரின் கடிதம், வங்கியிலிருந்து ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிதிக்கானச் சான்றுடன் விண்ணப்பங்களை தங்களது பகுதியில் உள்ள கால்நடை மருந்தகம், கால்நடை உதவி மருத்துவரிடம் 11.07.2017 க்குள் விண்ணப்பிக்கலாம், என தெரிவித்துள்ளார்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!