Perambalur: Lawyers’ Association boycotts court work for 2 days!
பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாக குழுவின் அவசர் கூட்டம் சங்கத் தலைவர் இ. வள்ளுவன் நம்பி தலைமையில் இன்று மாலை நடந்தது.
கூட்டத்தில், சென்னை, சைதாப்பேட்டை, வழக்கறிஞர் கவுதமை, மர்ம நபர்கள் கொடுரமாக கொலை செய்ததை சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு, குற்றவாளிகளை கைது செய்து உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல்துறையை வலியுறுத்தியும்,
முப்பெரும் சட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஹிந்தி. சமஸ்கிருத சட்ட திருத்தங்களை வாபஸ் பெற்று ஏற்கனவே நடைமுறையில் இருந்தபடி முப்பெரும் சட்டங்களை மீண்டும் 01.07.2024 முதல் நடைமுறை படுத்த மத்திய அரசை
வலியுறுத்தியும்,
நாளை 14.06.2024 வெள்ளிக்கிழமை, 18.06.2024 சனிக்கிழமை ஆகிய 2 நாட்கள் மட்டும் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்ற பணிகளிலிருந்து விலகி இருப்பதென ஏகமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் அச்சங்கத்தின் தலைவர் இ.வள்ளுவன்நம்பி, செயலாளர் வி.சேகர், பொருளாளர் பி. சிவராமன், உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.