Perambalur Police Department Used Vehicles Auction; SP Info!

பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு ச. ஷ்யமளாதேவி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 2 நான்கு சக்கர வாகனங்கள், 17 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 19 வாகனங்கள் தற்போது உள்ள நிலையில், வருகின்ற 13.07.2024-ம் ஆம் தேதி காலை 10.00 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் தனது தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணைக்காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட உள்ளது, என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஏலத்தில் அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம். அதிக விபரங்களுக்கு மாவட்ட ஆயுதப்படை வாகனப்பிரிவு அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது 9498159193, 9498158918 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஏலம் எடுக்க வரும் நபர்கள்: ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் வாகனங்களுக்கு ரூபாய்- 2000/- முன் தொகையாக வைப்புத் தொகையாக செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அடையாள எண் கொண்ட வில்லை வழங்கப்படும். பதிவு செய்த நபர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். உடனிருப்பவர்களுக்கு அனுமதி கிடையாது. அதிகபட்ச விலைக்கு வாகனங்களை ஏலத்திற்கு எடுத்தவர்கள் ஏலத்தொகை ஜி.எஸ்.டி 18% யுடன் சேர்த்து பிற்பகல் 03.00 மணிக்கு வாகனப்பிரிவு அலுவலகத்தில் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். செலுத்திய வைப்புத் தொகை கழித்துக் கொள்ளப்படும்.

வாகனத்தை ஏலம் எடுத்தவர் உரிய தொகையை செலுத்த தவறினால் தாங்கள் கட்டிய காப்பீட்டு தொகையை திருப்பிதரப்படமாட்டாது. ஏலம் ரூபாய் 100-ன் மடங்கில் கேட்கப்பட வேண்டும். வாகனத்துடன், வாகனம் ஏலத்தில் எடுத்ததற்கான சான்று மட்டுமே வழங்கப்படும். பதிவு செய்து வழங்க இயலாது. ஏல நடவடிக்கைகள் அனைத்தும் ஏலக்குழு அலுவலர்களால் முடிவு செய்யப்படும். பொது ஏலத்தில் காவல்துறையைச் சேர்ந்த எவரும் கலந்துகொள்ள அனுமதி இல்லை. வாகனங்களை 12.07.2024-ம் தேதி வரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேரில் சென்று பார்வையிடலாம். ஆதார் அடையாள அட்டையை கட்டாயம் எடுத்து வரவேண்டும்.

விளம்பரம்:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!