பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே தாய்கண்டித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவன் இன்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
பெரம்பலூர் ஆலத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட கொளத்தூர் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் அஜீத் (17). இவர், கொளக்காநத்தம் கிராமத்தில் உள்ள விடுதியில் தங்கி, அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வீட்டுக்கு வந்திருந்த மாணவன் அஜீத்தை, அவரது தாய் ஜானகி இன்று கண்டித்ததாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் அஜீத் விஷம் குடித்தார். அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து, ஜானகி அளித்த புகாரின்பேரில் மருவத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிமுத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.