PM Kisan Scheme Beneficiaries to Activate Direct Benefit Transfer System to Bank Account: Perambalur Collector Info!
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 3 தவணைகளில் ரூபாய் 2000/- வீதம் மொத்தமாக ரூபாய் 6000/- உதவித் தொகையாக நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டப்பலன் தொடர்ந்து விவசாயிகள் பெற தகுதியான விவசாயிகள் தங்களது வங்கி கணக்கினை நேரடி பலன் பரிமாற்றம் செய்வதற்கு ஏதுவாக மாற்றம் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு சம்மந்தப்பட்ட வங்கி கிளைகளை அணுகி மேற்கூறிய செயல்முறையை செய்திட அறிவுறுத்தப்படுகிறது. அல்லது இந்தியா போஸ்ட் வங்கிகளை அணுகி அவ்வங்கிகளில் புதிய வங்கி கணக்குகளை உருவாக்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்ட பயனாளிகள் 6,164 பயனாளிகள் இதுவரை நேரடி பலன் பரிமாற்ற முறைக்கு ஏதுவாக தங்களது வங்கி கணக்கினை மாற்றம் செய்யாமல் உள்ளனர். அவர்கள் மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி இத்திட்டப்பலன் தொடர்ந்து பெற்று பயனடையுமாறு, கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.