Police chase after teenager who snatched jewelery from a woman walking near Perambalur!

கற்பனை காட்சி
பெரம்பலூர் மாவட்டம், திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் கல்பாடி பிரிவு அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு பணிக்கு சென்று கொண்டிருந்த பெண்ணிடம், அடையாளம் தெரியாத வாலிபர் 5 பவுன் மதிப்புள்ள தாலிக்கொடியை பறித்துக் கொண்டு, வாகனத்தில் தப்பி சென்றார். இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு கொடுத்த புகாரின் பேரில், வேகமாக செயல்பட்ட ஹை வே பேட்ரோல் போலீசார், வாலிபர் சென்னை சாலையில் சென்று கொண்டு இருப்பதை அறிந்து துரத்தி சென்றனர். இது குறித்து மங்கலமேடு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மங்கலமேடு, திருமாந்துறை சுங்கச் சாவடியில் வேகமாக வந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மதினா நகரை சேர்ந்த சையது மாசு, மகன் ஷாகுல் ஹமீது (27) என்பது தெரியவந்தது. வாகனம் விபத்துக்குள்ளானதால் தாலிக்கொடியை பறித்தாகவும், போலீசார் துரத்தியதால் வழியிலேயே வீசி விட்டதையும் தெரிவித்தான். தங்கசங்கிலைய பறிகொடுத்த பெண், பேரளி கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மனைவி கனகாம்பரம் என்பவரிடம் வீசி எறியப்பட்ட செயினை கண்டறிந்து போலீசார் ஒப்படைக்க உள்ளனர். விரைந்து செயல்பட்டு, தாலிக்கொடியை மீட்டு கொடுத்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிகின்றன.