Theft at the school near Perambalur: Police investigate
பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. நேற்றிரவு பள்ளியின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பள்ளி தலைமையாசிரியர் அறையில் இருந்த 2 சைக்கிள்கள், தையல் மிசின்கள் மற்றும் கம்பியூட்டர் சி.பி.யூ , உள்பட ரொக்கம் ரூ.3 ஆயிரத்தை திருடி சென்றனர். இது குறித்து தலைமையாசிரியை கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்குள் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.