Truck-bike head-on collision near Perambalur; One victim!
பெரம்பலூர் அருகே இன்று லாரியும் பைக்கும் மோதிக் கொண்ட விபத்தில், பைக்கில் வந்தவர் பலியானார்.
பெரம்பலூரில் இருந்து லாரி ஒன்று, அரியலூரை நோக்கி சென்று கொண்டிருந்தது, லாரி ஒதியம் பிரிவு சாலை அருகே முன்னே சென்றுக் கொண்டிருந்த லாரியை முந்தி சென்றது. அப்போது எதிரே பைக்கை பெரம்பலூர் நோக்கி ஓட்டி வந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாமாக உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தில் உயிரிழந்தவரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள சடைக்கன்பட்டியை சேர்ந்த சின்னையன் மகன் செல்வராஜ் (50), என்பது தெரிய வந்தது.
லாரியை ஓட்டி வந்த திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி மாதா கோவில் தெருவை சேர்ந்த பவுல் ராஜ் (60) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து சம்பவத்தால், அரியலூர் – பெரம்பலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை போலீசார் சீரமைத்தனர்.