Untouchability rally on behalf of scout students in Perambalur!

பெரம்பலூரில், மனிதநேய வார விழாவை முன்னிட்டு நடந்த தீண்டாமை ஒழிப்பு பேரணியை டி.ஆர்.ஓ வடிவேல் பிரபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழா ஜனவரி 24 முதல் 30 வரை கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சாரண,சாரணிய மாணவர்களைக் கொண்டு தீண்டாமை ஒழிப்பு பேரணி நடைபெற்றது.

இதில், அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளான ஆலம்பாடி, ஈச்சம்பட்டி, லாடபுரம், களரம்பட்டி, பொம்மனப்பாடி, நத்தக்காடு, பாடாலூர், பசும்பலூர் ஆகிய பள்ளிகளைச் சார்ந்த 92 சாரணர்கள் 88 சாரணியர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கிய பேரணி கிருஷ்ணா தியேட்டர், சங்கு, கடைவீதி, பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவு பெற்றது.

அதில், தீண்டாமையை ஒழிப்போம், தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திக் கொண்டு நடந்துச் சென்றனர்.

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விஜயன், தனி வட்டாட்சியர் (ஆதிந) அனிதா, சாரண ஆசிரியர்கள், பெரம்பலூர் மாவட்ட பாரத சாரண சாரணிய இயக்கத்தின் பொறுப்பாளர்கள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Perambalur News whatsapp Link ;

https://chat.whatsapp.com/CgjmTIRZKA6749dNr6APO1


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!