VCK organizer suspended: Perambalur management committee action!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டப்பாடி கிராமம், காலனியை சேர்ந்தவரும், தற்போது, பெரம்பலூர் டவுன், 4 ரோடு, மின்வாரிய ஆபீஸ் எதிரில், முத்துலெட்சுமி நகர், 2வது குறுக்குத்தெரு என்ற முகவரியை சேர்ந்த கந்தசாம மகன் நடராஜன், என்பவர் விசிக கட்சியின் வேப்பந்தட்டை ஒன்றிய இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் ஒன்றிய அமைப்பாளராக உள்ளார்.
நடராஜன் கடந்த 3 மாத காலமாக கட்சியின் விதிகளுக்கும், நடைமுறைகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதுடன் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து வருகிறார். இது குறித்து அவரிடம் நேரில் பேசி அறிவுறுத்தியும் தனது போக்கை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்து வருவதால், பெரம்பலூர் மேற்கு மாவட்ட நிர்வாகக்குழு கூடி ஆலோசித்து நடராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டடு, கட்சி பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் இன்றிலிருந்து 6 மாத காலம் வரை இடைநீக்கம் செய்யப்படுகிறார் எனவும், பெரம்பலூர் மேற்கு மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த யாரும் அவருடன் கட்சி ரீதியாக எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் மாவட்ட நிர்வாகக்குழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என விசிக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.