Veppanthattai Taluk Head Quarters Hospital to accept the public’s demand and operate 24 hours a day: candidate Parivendar Guaranteed!!

Poolamabdi

பெரம்பலூர் எம்.பி தேர்தலில் பாஜக கூட்டணியில், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உடும்பியம் கிராமத்தில் பிரச்சாரத்தை தனது கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரித்தார். பெண்கள் ஆங்காங்கே பாரிவேந்தரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அப்போது, அவர் பேசியதாவது:

எனக்கு கடந்த தேர்தலில், 6 லட்சம் வாக்குகள் வெற்றி பெற செய்தீர்கள், கடந்த தேர்தலில் நான் கொடுத்த பெரும்பான்மையான வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளேன். சில வாக்குறுதிகள் பெரம்பலூர் வழியாக அரியலூர் – நாமக்கல் வரையிலான ரயில் திட்டம் போன்று செயல் பாட்டில் உள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டு சாதனைகளை புத்தகமாக வெளியிட்டுள்ளேன். நீங்கள் படித்து பார்க்க வேண்டும்.

எந்த பாராளுமன்ற உறுப்பினரும், செய்யாத வகையில் எனது சொந்த நிதியை செலவளித்து, சர்வதேச தரத்திலான பல்கலை கழகத்தில் 1200 ஏழை எளிய மாணவர்களை படிக்க வைத்துள்ளேன். இதற்கு சுமார் 118 கோடி ரூபாய் செலவாகிறது. இப்பகுதி கல்லாற்றில் தடுப்ணை கட்டவும், ஜவ்வரசி ஆலை அமைக்கவும், ஐடிஐ அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்களின் கோரிக்கை ஏற்று கிருஷ்ணாபுரத்தில் செயல்படும் வேப்பந்தட்டை வட்டார மருத்துவமனையை அதிக படுக்கை வசதிகள் கொண்ட மருத்துமனையாக தரம் உயர்த்தவும், மருத்துவர்கள் இல்லாத நிலையை போக்கி, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் இப்பகுதி மக்கள் மருத்துவம் பெறும் வகையில் தரம் உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.

வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள கள்ளப்பட்டி, பூலாம்பாடி, அரும்பாவூர், கிருஷ்ணாபுரம், கைகளத்தூர், வி.களத்தூர், மங்கலமேடு, வேப்பந்தட்டை, உள்ளிட்ட பல கிராமங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, ஐகேகே கட்சியை சேர்ந்த மாநில பொதுச்செயலாளர் ஜெயசீலன், முதன்மை செயலாளர் சத்தியநாதன், பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ரகுபதி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வினோத், முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரன், பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார், அமமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், தாமக மாவட்ட தலைவர் கிருஷ்ணஜனார்த்தனன், பாஜக மாவட்டத் தலைவர் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் திரளாக கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!