World Yoga Day: Yoga Practice at Perambalur Court; Judges attended.
பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிபதி பல்கீஸ் தலைமையில் உலக யோகா தினம், பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கடைபிடிக்கப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் நீதிபதி இந்திராணி , தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சங்கர், சார்பு நீதிபதி அண்ணாமலை , மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான சந்திரசேகர், மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜமகேஷ்வர், மற்றும் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதித்துறை நடுவர் பர்வதராஜ் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உலக யோகா தினத்தை முன்னிட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் பெரம்பலூர் இயற்கை மருத்துவமனை யோக நிபுணர் டாக்டர். வேல்முருகன், யோகா பயிற்சியை துவக்கி வைத்து அனைவருக்கும் கற்று கொடுத்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகர் நன்றி கூறினார்.