பெரம்பலூர் : குன்னம் அருகே உள்ள கீழப்புலியூர் ஊராட்சி உள்ளது இந்த ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏரி ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதில் 7 மற்றும் 11 வது வார்டு மக்கள் பணியில் ஈடுபட்டனர்
7 மற்றும் 11 வது வார்டு மக்கள் பணியில் ஈடுபட்ட அன்று கடந்த 15ந் தேதி அரசு விடுமுறையானதாலும் நேற்று அவ்வூராட்சியின் துணை தலைவர் உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாலும் விடுமுறை விடப்பட்டது.
எனவே விடுமுறை விடப்பட்ட 2 நாட்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று 7 மற்றும் 11 வது வார்டு பொது மக்கள் இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் விடுமுறைக்கான காரணத்தை கூறி இன்றும் நாளையும் தாங்களே வேலை செய்யுமாறு கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.