1.13 crore worth welfare assistance at Perambalur Legal Services Mass Camp!

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு வெள்ளிவிழா சட்டப்பணிகள் பெருந்திரல் முகாமில் 78 பயனாளிகளுக்கு ரூ.1.13 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி பல்கீஸ் மற்றும் மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா ஆகியோர் வழங்கினர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு வெள்ளி விழா சட்டப்பணிகள் பெருந்திரல் முகாம் நிகழ்ச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி பல்கீஸ் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் வெங்கடபிரியா, நிரந்தர மக்கள் நீதி மைய தலைவரும், கூடுதல் அமர்வு நீதிபதியுமான கிரி, போலீஸ் எஸ்.பி. மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழச்சியில், டி.ஆர்.ஓ., அங்கையற்கன்னி, ஆர்.டி.ஓ. நிறைமதி, சார்பு நீதிபதி செயலாளர் (மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு) லதா, இணை இயக்குநர் கருணாநிதி, மேலாளர்(தாட்கோ) ஷியமலா உள்ளிட்ட நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!