1.5 pounds of gold jewelry and cash were stolen by breaking the lock of a house near Perambalur!
பெரம்பலூர் அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர், செல்லப்பிள்ளை (60), இவரது மனைவி இந்திராணி உடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த 17ம் தேதி திருச்சியில் மச்சான் வீட்டிற்கு சென்று விட்டு இன்று மாலை வீட்டிற்கு திரும்ப வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோ திறந்து கிடந்துள்ளது.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்களுடன் சென்று விசாரணை நடத்தினர். அதில், வீட்டில் இருந்த, ஒரு பவுன் மோதிரம், அரை பவுன் தங்க காசு, வெள்ளி அரைஞான் கொடி, வெள்ளி கொலுசுகள், வெள்ளி இடுப்பு சலங்கை, ரொக்கம் ரூ. 10 ஆயிரத்தை கொள்ளையர்கள் எடுத்து சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.