1.Cr liters of milk should be purchased at the meeting: the decision of the milk manufacturer meeting

பெரம்பலூர் : தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் மாநிலக் குழு கூட்டம் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாநில தலைவர் எ.எம்.முனுசாமி தலைமை வகித்தார். மாநில பொருப்பாளர்கள் என்.செல்லதுரை மற்றும் ராமநாதன் முன்னிலை வகித்தனர்.

மாநில பொதுச்செயலாளர் முகமதுஅலி சிறப்புரை ஆற்றினார். பின்னர், கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் :

மத்திய அரசு மாடுகள் எருமைகள் ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக விற்கக்கூடாது என்று தடை விதித்துள்ளது.

இதனால் விவசாயி மட்டுமில்லாது பால்உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிப்படைந்துள்ளார்கள். பால்கறவை நின்ற மாடு மற்றும் வயது முதிர்ந்த மாடுகளை விற்கவும் வாங்கவும் முடிய வில்லை இந்நிலை நீடித்தால் பல்வேறு வகையான மாட்டு ரகங்கள படிப்படியாக அழிந்து விடும்.

இந்து மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே பாஜக அரசின் போக்கு உள்ளது. எனவே இந்த சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும், விவசாயம் பருவமழை இல்லாமல் அழிந்து வரும் இக்காலத்தில் பல லட்சம் குடும்பங்களுக்கு பால் உற்பத்தி தொழில் தான் வாழ்வாதாரமாக உள்ளது.

தற்போது கால்நடை தீவனங்களின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சுமார் 15 லட்சம் குடும்பங்கள் நாள் ஒன்றுக்கு ஒன்றரை கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்கின்றனர். 2014 ஆம் ஆண்டுக்கு பின் பாலுக்கு கொள்முதல் விலையும் உயர்த்தப்படாததால் இத்தொழிலை கைவிடும் ஆபத்து தற்போது தமிழகத்தில் நிலவி வருகிறது.

மேலும், பசும்பாலுக்கு லிட்டர் ரூ28 லிருந்து ரூ35 எனவும் எருமைப்பாலுக்கு 35 லிருந்து ரூ 45 எனவும் கொல்முதல் விலை உயர்த்தி வழங்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

கால்நடை தீவனங்களுக்கு 50 சதவீதம் மானிய விலை நிர்ணயம் செய்து பால் உற்த்தியாளர்களுக்கு வழங்க வேண்டும்.

பாலில் கலப்படம் செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கு சங்கத்தின் சார்பாக வரவேற்கிறோம்.

ஆனால் தனியார் நிறுவனம் கலப்படம் செய்வதற்கு அரசு தான் காரணம் என்று மாநிலக்குழு சார்பில் குற்றம் சாட்டுகிறோம்.

பொதுமக்களுக்கு தரமான பாலை வழங்குவதற்காகவே ஆவின் கூட்டுறவு நிறுவனம் துவங்கப்பட்டது. தமிழகத்தில் தினம் உற்பத்தி செய்யப்படுகின்ற ஒன்றரை கோடி லிட்டர் பாலில் சுமார் 25 முதல் 30 லட்சம் லிட்டர் வரை கொள்முதல் செய்கிற கட்டுமானம் மட்டுமே ஆவின் நிறுவனத்திடம் உள்ளது.

மீதி பாலில் 50 லட்சம் லிட்டர் பாலை அரசு அனுமதி பெற்ற 46 தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்து விற்கின்றனர். அதுவும் கெட்டிப்பால் கட்டித்தயிர் என்று சோயாபீன்ஸ், மரவள்ளிமாவு, போன்றவற்றை கலந்து ரசாயணப் பொருட்களையும் கலந்து கொள்ளை லாபம் அடிக்கின்றனர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தப்படி, நாள் ஒன்றுக்கு ஒரு கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் மூலம் விற்பனை செய்யப்படும் என்ற நிலை இருந்தால் தனியார் பாலைத் தேடி பொதுமக்கள் செல்ல மாட்டார்கள். எனவே, தமிழக அரசு கொள்முதலையும் விற்பனையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரும் ஆக.10 அன்று மாநிலம் முழுதும் உள்ள அரசு அலுவலகம் மற்றும் ஆவின் நிறுவனங்கள் முன்பு கறவை மாடுகளுடன் போராட்டம் நடத்தப்படும் என்று மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!