1 lakh postage cards for prime minister to fulfill Kidnap child trafficking bill
பார்லிமென்ட்டில் பெண் குழந்தைகள் கடத்தல் தொடர்பான மசோதாவை வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் நிறைவேற்றக் கோரி தமிழகத்திருலிருந்து 1 லட்சம் தபால் அட்டைகள் பாரதப்பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தமிழக அளவிலான சிவில் சமூகக் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. பள்ளிபாளையம் வேர்டு நிறுவன இயக்குனர் ரேனிடா சரளா நிகழ்ச்சிக்கு த லைமை வகித்தார். ராசிபுரம் தென்பாஸ்கோ அன்பு இல்ல திட்ட இயக்குனர் ஆல்பர்ட், பாண்டமங்கலம் பெண்களுக்கான மேம்பாட்டு இயக்கத்தின் செயலாளர் சிவகமாவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், இந்தியாவில் லட்சக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் ஆட்கடத்தலுக்கு ப லியாகி வருகின்றனர். இதை உடனடியாக தடுத்து நிறுத்துவதும் அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதும் இன்றைய அவசியத்தேவையாகும். இந்த நிலையில் ஆள் கடத்தலை தடுத்திடவும், பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கவும், அவர்களுக்கு உரிய மறுவாழ்வு வழங்கிடவும் முழுமையான சட்டம் இதுவரை இந்தியாவில் இல்லை.
இதற்கான முழுமையான- சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இது சம்மந்தமாக கடந்த ஜூலை மாதம் பார்லிமென்டில் ஆட்கடத்துலுக்கு எதிரான சட்ட முன்வரைவு கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த முன்வரைவை வருகிற குளிர்காலக் கூட்டத்தொடரில் ராஜ்சபாவில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்க வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு சம்மந்தமான பல்வேறு அமைப்புகள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இருந்து சுமார் 1 லட்சம் தபால் அட்டைகள் பொதுமக்கள் மூலம் பெறப்பட்டு அவற்றை பாரதப்பிரதமரின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பிக்களுக்கு இது குறித்து கடிதங்கள் அனுப்பபப்பட்டு வருகின்றன. வரும் பார்லிமென்ட் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்கும்போது இக்கோரிக்கைகள் குறித்து சமூக அமைப்புகளின் சார்பில் புதுடெல்லியில் எம்.பிக்களின் கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளடக்கிய ஆட்கடத்தல் மசோதாவை பார்லிமென்ட் ராஜ்சபாவில் வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றி உடனடியாக சட்டமாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திரளான களப்பணியார்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.