10.936 people wrote in Perambalur, Group 4 exam
பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று நடந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தொகுதி -4 தேர்வில் (குரூப் 4) 13,712 நபர்கள் பங்கேற்க நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. 10,936 நபர்கள் மட்டும் தேர்வு எழுதினர். மீதமுள்ள 2,776 நபர்கள் இத்தேர்விற்கு வருகை தரவில்லை.
இத்தேர்விற்காக, பெரம்பலூர் வட்டத்தில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, எசனை அரசு மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர் செயின்ட் டோமினிக்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளி, குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி, கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி, சிறுவாச்சூர் சீனிவாசன் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, பெரம்பலூர் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி, பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி, பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவா; கல்லூரி ஆகிய 12 மையங்களிலும்,
குன்னம் வட்டத்தில் குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளி, வேப்பூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி (மகளிர்), மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 மையங்களிலும்,
வேப்பந்தட்டை வட்டத்தில் வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, வி.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி, வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 மையங்யளிலும்,
ஆலத்தூர் வட்டத்தில் பாடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 2 மையங்களிலும் என மொத்தம் 20 மையங்களிலும் இத்தேர்வு நடைபெற்றது.
பெரம்பலூர் வட்டத்தில் 38 நபர்களும், குன்னம் வட்டத்தில் 3 நபர்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 3 நபர்களும், ஆலத்தூர் வட்டத்தில் 2 நபர்களும் என மொத்தம் 46 பேர்கள் இத்தேர்விற்கான கண்கானிப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், பெரம்பலூர் வட்டத்தில் 11, குன்னம் வட்டத்தில் 1, வேப்பந்தட்டை வட்டத்தில் 1, ஆலத்தூர் வட்டத்தில் 1 குழு என மொத்தம் 14 நடமாடும் குழுக்கள் தேர்வுதாள்கள்களை மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது. பெரம்பலூh; வட்டத்தில் 8;, குன்னம், வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர; வட்டத்தில் தலா 1 என மொத்தம் 11 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. மேலும் தேர்வு நடவடிக்கைகள் 4 வட்டங்களிலும் மொத்தம் 26 வீடியோகிராபர்கள் மூலமாக ஒளிப்பதிவும் செய்யப்பட்டது.
தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக தேர்வு மையங்களுக்கு சென்று வர பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு மையத்திலும் உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவர் மற்றும் செவிலியர் கொண்ட மருத்துவ குழு மற்றும் தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் இருந்து தேர்வுகள் நடத்தப்பட்டது.