10 pounds of gold jewelry and 50 thousand cash stolen from 2 houses near Perambalur!
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பேரூராட்சியை சேர்ந்தவர் அந்தோணிசாமி மகன் அமுல்தாஸ் (42), பேரூராட்சியில் டிரைவராக உள்ளார். அவரது மனைவி ஜெயா, அங்குள்ள தனியார் பள்ளியில் வேலை செய்கிறார்.
வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு, ஜன்னலில் சாவியை வைத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். மாலை வீடு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டில்
அடையாளம் தெரியாத நபர் பூட்டை திறந்து வீட்டின் உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அமுல்தாஸ் மற்றும் அவரது தந்தை அந்தோனிசாமி வீட்டிலும், சுமார் 10 பவுன் தங்க நகைகள், ஒரு வெள்ளி அரைஞாண் கொடி மற்றும் ரொக்கம் ரூ. 10 ஆயிரத்தை எடுத்துச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையனை அடையாளம் காணும் பணியில் தீவிராக ஈடுபட்டுள்ளனர்.