10 years imprisonment for teenager who threatened and sexually assaulted girl: Rs. 50 thousand fine; Perambalur Court Verdict!
பெரம்பலூரில் சிறுமியை மிரட்டி பாலியல் வண்புணர்வு செய்த வழக்கில் வாலிபருக்கு, 10 ஆண்டுகள் சிறையினையும், ரூ. 50 ஆயிரம் அபராதத்தையும் மகிளா நீதிமன்றம் விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம், பங்களா ஸ்டாப்பை சேர்ந்த, கலியபெருமாள் மகன் ஆனந்தராஜ் (41) , மீது அப்பகுதியை சேர்ந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாக, உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில்,
பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, வழக்கானது பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு இன்று குற்றம் நிரூபிக்கப்பட்டதால், வாலிபர் ஆனந்தராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 50000/- அபராதமும் அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை எனவும் தண்டனை என தீர்ப்பளித்து மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசார் வாலிபரை சிறையில் அடைத்தனர்.