100 per cent victory in the local elections, the AIADMK In Perambalur the meeting today on behalf of the women’s team
பெரம்பலூர் மாவட்ட அஇஅதிமுக மகளிர் அணி சார்பில் இன்று உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவது குறித்த கூட்டம், மகளிர் அணிச் செயலாளரும், மாநிலங்களவை கொறடாவுமான விஜிலாசத்தியானந்த் தலைமையில் இன்று மாலை 3 மணி அளவில் துரைமங்கலத்தில் நடக்கிறது.
மகளிர் அணிச் செயலாளர்கள் கீர்த்திகாமுனிசாமி, வெ.சரோஜா, சக்தி கோதண்டம், மகளிர் அணி துணைச் செயலாளர்கள் சி.ஆர்.சரஸ்வதி, கே.எம்.கலைச்செல்வி, சகுந்தலா, திருப்பூர் விசாலாட்சி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மாவட்ட மகிளர் அணி உறுப்பினர் கி.இராஜேஸ்வரி வரவேற்கிறார். மேலும், கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன், எம்.பி மா.சந்திரகாசி மற்றும் எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன் மற்றும் ஒன்றிய செயலாளர் கர்ணன் (ஆலத்தூர்), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை) உள்பட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
மகளிர் அணி பொருளாளர் மைதிலி கோபிநாத் நன்றி கூறுகிறார்.