100 percent subsidy from Central Government: Rs. 8.14 lakh worth of implements and machinery was distributed by the collector to the farming groups in Perambalur.

மத்திய அரசின் 100 சதவீத மானியத்தில், கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் , பட்டியலின விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூரில், கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில் நடந்தது.

மத்திய அரசின் பங்களிப்புடன் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பட்டியலின விவசாயிகளுக்கு இந்த வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்படுகின்றது. தேங்காய் உரிக்கும் கருவி, தென்னை மரம் ஏறும் கருவி, நேரடி நெல் விதைக்கும் கருவி, மானாவாரி களையெடுக்கும் கருவி, உருளை களையெடுப்பான், நிலக்கடலை தோல் நீக்கும் கருவி, விசை தெளிப்பான், உரமிடும் கருவி, பேட்டரியால் இயங்கும் தெளிப்பான், தீவன தட்டு வெட்டும் கருவி, மக்காச்சோளம் விதை பிரித்தெடுக்கும் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு வகையான வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றது.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டத்தின் கீழ், பட்டியலின விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு அரசு துறைகள் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துறைகள் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு கருவிகள் வழங்கப்படுகின்றது.

இத்திட்டத்தின் மூலம் நிலம் உள்ள பட்டியலின விவசாயிகளுக்கு தேவையான பண்ணைக் கருவிகளை வழங்கி பண்ணை இயந்திரமாக்கலை அதிகரிக்கவும், அவர்களின் விவசாயத்தை மேம்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை 3 மடங்காக்கவும், உற்பத்தியினை 2 மடங்காக்கவும் உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலெட்சுமி, மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம். .சி.இராஜேந்திரன், கோயம்புத்துார் வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர் அ.ரவிராஜ், பெ.ராஜ்குமார், பெரம்பலுார் மாட்ட வேளாண்மை உழவர் நலத்துறை இணை இயக்குநர் கருணாநிதி மற்றும் கோயம்புத்தூர் வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய போராசிரியர்கள், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தழுதாழை டி.சி பாஸ்கர், பாடாலூர் சோமு.மதியழகன், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!