வாக்களிப்பதன் அவசியத்தை கல்லூரி மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் விதமாக ரோவர; பாலிடெக்னிக் கல்லூரியல் 100% VOTE என்ற வடிவத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.
பெரம்பலூர் : நடைபெறவுள்ள சட்டமன்றப்பொதுத் தேர்தலில் 100 சதவீத வாக்காளர் பதிவு, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் கல்லூரிகளில் பயின்று வரும் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களிடையே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் அதனால் நமது நாட்டிற்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் மாணவ, மாணவிகளிடையே தேர;தல் குறித்த போதிய தெளிவு ஏற்ப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக வாக்காளர் பட்டியலில் நூறு சதவீத வாக்காளர் சேர்ப்பு மற்றும் நூறு சதவீத வாக்குப்பதிவு உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தும் விதமாக
பெரம்பலூர் ரோவர் பாலிடெக்னிக் கல்லூரியில் கல்லூரிப் பேருந்துகளை 100% VOTE என்ற வடிவில் நிறுத்தி, விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவழகள் ஒட்டினார்.
மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி பேருந்துகளிலும் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.