1,000 each for the differently abled persons with the National Identity Card; Perambalur Collector V. Santha Information
பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுதுள்ள செய்திக்குறிப்பு
கொரோனா வைரஸ் ( COVID-19) நோய் தொற்று பரவலினை தடுக்க தழிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இக்காலங்களில் ஏழை எளிய மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கியும் பொருளாதார மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டும் முனைப்புடன் செயல்பட்டுவருகிறது.
தற்போது 30.06.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளி நபர்களுக்கு தலா ரூ.1000- ரொக்க நிவாரணத்தினை அவர்கள் வீட்டிலேயே வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டையை காண்பித்து அதன் நகலினை நிவாரணம் வழங்கும் அலுவலரிடம் சமர்ப்பித்து நிவாரண தொகை ரூ.1000- பெற்றுக்கொள்ளலாம். விநியோகபடிவம் பூர்த்தி செய்ய தேவையான விவரங்களை மாற்றுத்திறனாளிகளால் அளிக்கப்பட வேண்டும். நிவாரண தொகை வழங்கும் அலுவலர் நிவாரண தொகை வழங்கிய விவரத்தினை தேசிய அடையாள அட்டையுடன் கூடிய பதிவுபுத்தகத்தில் உதவிகள் வழங்கும் பக்கத்தில் COVID -19 நிவாரண தொகை ரூ.1000- வழங்கப்பட்டது என்று முத்திரையிட்டு வழங்கும் அலுவலர் கையொப்பம் இடுவார். நிவாரணதொகை இரண்டு 500- நோட்டுகளாக வழங்கப்படும்
இந்தநிவாரண உதவி தொகை 30-06-2020 முதல் பயனாளிகளின் இருப்பிடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் மூலம் நேரில் வந்து வழங்கப்படும். நிவாரணதொகை பெறுவதில் சிரமம் ஏதும் இருப்பின் பெரம்பலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தொலைபேசி எண்: 9499933485, அலுவலக தொலைபேசிஎண்: 04328-225474 ,முடநீக்கியல் வல்லுநர் தொலைபேசிஎண்: 9566260173 மற்றும் செயல்திறன் உதவியாளர் தொலைபேசி எண்: 7448940234 ல் தொடர்புகொள்ளவும். உதவி மறுக்கப்படும் சமயத்தில் அல்லது கிடைபெறவில்லை எனில் மாநிலமையஎண்: 18004250111 தொடர்புகொள்ளலாம்.
நிவாரண தொகை மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களின் பெற்றோர்கள் அல்லது சிறப்பு சூழ்நிலையில் பாதுகாவலர்களிடம் மட்டுமே வழங்கப்படும். வேறு மாவட்டங்களை அல்லது நிவாரண தொகை வழங்கும் அலுவலர் பகுதிக்கு உட்படாத பிறபகுதிகளை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் விவரம் தேசிய அடையாளஅட்டை மற்றும் அதன் விவரங்களை நிவாரண தொகைவழங்கும் அலுவலரிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அரசு போதிய நிதியினை ஒதுக்கியுள்ளதால் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நிவாரண தொகை தலா ரூ.1000- வழங்கப்படும். எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் நிவாரண தொகையினை பெற்று பயனடையலாம், என அதில் தெரிவித்துள்ளார்.