பெரம்பலூர்: வேப்பந்தட்டை வட்டம் உடும்பியம்
ஊராட்சிக்குட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகள்
நந்தினி(9). கள்ளப்பட்டி
அரசுப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை பள்ளிக்கு சென்றவர் வழக்கம் மாலை
பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்த போது
சாலையோரம் உள்ள கிணற்றி்ன் அருகே சென்றுள்ளார். தவறி விழுந்த மாணவி உயிரிழந்தார்.
இதுபற்றி நந்தினியுடன் படிக்கும் சக மாணவிகள் சம்பவம் பற்றி தெரிவித்ததை தொடர்ந்து, பெரம்பலூர்
தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமி நந்தினியின் உடலை
கிணற்றில் தேடும் பணியில் ஈடுட்டுள்ளனர்.
இதுகுறித்து அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.