முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜுன்- ஜுலை 2016 பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வெழுத இவ்வலுவலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மார்ச் 2016 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை பள்ளி மாணாக்கராகவோ அல்லது தனித் தேர்வர்களாகவோ தேர்வெழுதியிருக்க வேண்டும். பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, வருகைப் புரியாத அனைத்து பாடங்களையும் உடனடித் தேர்வெழுத 14.06.2016 அன்று பதிவு செய்யலாம்.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் தேர்வெழுதாதவர்கள் (Absentees) தமது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டையும் விண்ணப்பத்தினை பதிவு செய்யும் போது காண்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ.125- சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.500- ஆன்- லைன் பதிவுக் கட்டணம் ரூ.50-மொத்தம் ரூ.675 சேர்த்து பணமாக மட்டுமே செலுத்த வேண்டும், என தெரிவித்துள்ளார்.