11 special flying squads to monitor corona spread prevention missions; Perambalur Collector Information.
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டம், கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்திட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா நோய் தொற்று பாதுகாப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாகவும் கொரோனா நோய் தொற்று பரவல்கள் அதிகரித்து வருவதால் ஏற்கனவே அரசு அறிவித்துள்ள கட்டுபாடுகளை தீவிரமாக கண்காணித்திடவும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிப்பதை உறுதி செய்யவும், பெரம்பலூர; மாவட்டத்திலுள்ள பெரம்பலூர் பகுதி-1, பெரம்பலூர் பகுதி-2, வெங்கலம், வாலிகண்டபுரம், பசும்பலூர், கொளக்காநத்தம், கீழப்புலியூர், செட்டிக்குளம், வரகூர், வடக்கலூர், கூத்தூர் ஆகிய 11 குறுவட்டத்திற்கும் தலா 1 வட்டாட்சியர் தலைமையில் 1 உதவியாளர் அல்லது வருவாய் ஆய்வாளர் கொண்ட 11 சிறப்பு பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்று நோயினை கட்டுப்படுத்திட முகக்கவசம் அணிவதனை தவறாமல் பின்பற்றிட வேண்டும். பொதுவெளியிலும், பணிபுரியும் இடங்களிலும் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சோப்பு திரவத்தினை பயன்படுத்தி கைகளை அடிக்கடி நன்கு சுத்தம் செய்திட வேண்டும். அவசிய தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து கொரோனா நோய் தொற்றினை பரவாமல் தடுத்திட மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.