Perambalur Golden Gates 11th Annual day

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள கோல்டன் கேட்ஸ் வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளியின் பதினோராம் ஆண்டுவிழா, “பார்வை துளிகள்” என்ற தலைப்பில் நடைபெற்றது. விழாவை போலீஸ் எஸ்.பி நிஷாபார்த்தீபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

பள்ளி ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமாரி வரவேற்றார். பள்ளி முதல்வர் பவித் வாசித்த ஆண்டறிக்கையில் இந்த கல்வியாண்டின் அனைத்து நிகழ்ச்சிகளின் தொகுப்பு மற்றும் மாணவர்களின் சாதனைகளைப் பற்றியும் எடுத்துரைத்தார். கடந்த கல்வியாண்டின் மதிப்பெண் தரப்பட்டியலில் முதல் மூன்று இடம் பிடித்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

பிறகு மாணவ, மாணவிகள் பல்வேறு நாடுகளின் பாரம்பரிய நடனங்களான பாரீஸ் நடனம், சீன நடனம், இராஐஸ்தான் நடனம், குறவஞ்சி நடனம், ஆதிவாசிகள் நடனம் ,
ஜப்பானிய நடனம், மீனவர்கள் நடனம் மற்றும்; பல நடனங்கள் மூலம் பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தையும் வெளிக்காட்டினர். மேலும், நாடகம் மூலம் மாசுக்கட்டுபாடு, இன ஒற்றுமையின்மை, பெண்கள் பாதுகாப்பின்மை போன்ற விழிப்புணர்வு நிகழ்த்தி காட்டினர்.
பள்ளி மாணவத் தலைவன் லிங்கேஷ்வரன் நன்றி கூறினார். ஆண்டு விழாவை பள்ளி நிர்வாகம், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் , மாணவ – மாணவிகள்
ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

படவிளக்கம்:

பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழாவில் மாணவர் ஒருவருக்கு போலீஸ் எஸ்.பி நிஷாபார்த்தீபன் பரிசு வழங்கி பாராட்டிய போது எடுத்தப்படம். அருகில் தாளாளர் ஆர்.ரவிச்சந்திரன், செயலர் அங்கையர்கன்னி, முதல்வர் பவித் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!