12 pounds Gold Rs. 7 lakh robbery near Perambalur, police investigation!

பெரம்பலூர் அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தை சேர்ந்தவர் அப்பாதுரை மனைவி தமிழரசி (55). கணவர் இறந்து ஒன்றரை வருடம் ஆகின்றது. இவருக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளார்.
மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. தமிழரசி மட்டும் தனியாக வசித்து வருகிறார் இதில் நடுமகன் விஜயகுமார் அதே ஊரில் திருமணம் செய்து கொண்டு மனைவி வீட்டில் வாழ்ந்து வருகிறார், தமிழரசி அம்மா இரவு தனது மகன் விஜயகுமாரின் மாமனார் வீட்டிற்கு சென்று தூங்குவது வழக்கம் அதேபோல் நேற்றிரவும், தூங்கச் சென்றுவிட்டார். இன்று காலை சுமார் 5 மணியளவில் வந்து பார்த்த போது, வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 12 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ 7 லட்சம் களவு போயிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னா, இது குறித்து மருவத்தூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார்கள் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்பநாய் படை பிரிவு, விரல் ரேகை மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!