*பெரம்பலூர் ஆவின் குளிரூட்டு நிலையம் முன் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் ஜே. பாலாஜி தலைமை வகித்தார். சட்டப்பேரவை தொகுதி செயலர் ஆர். வசீகரன், மாவட்ட துணை செயலர் த. அருண்குமார், ஒன்றிய செயலர்கள் குணா, செங்கமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொள்கை பரப்பு செயலர் குணா, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், பால் உற்பத்தியாளர்களிடமிருந்து மொத்த பாலையும் ஆவின் நிறுவனமே கொள்முதல் செய்யவேண்டும். பால் பதப்படுத்தும் குளிர்சான வசதி கொண்ட கொள்கலன்களை அதிகளவில் நிறுவ வேண்டும். பாலை மூலப்பொருளாக கொண்டு உற்பத்தி செய்யப்படும் பால் பவுடர், பால்கோவா, தயிர், நெய் ஆகியவற்றின் உற்பத்தி அளவை அதிகரிக்க வேண்டும்.
பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்து பாலுக்கு உரிய விலை வழங்காத தனியார் பால் நிறுவனங்களின் உரிமைத்தை ரத்து செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் பாலுக்கு ஒரே கொள்முதல் விலை வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
* பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாக குற்றம் சாட்டி பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் 9வது நாளாக இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் ஆத்தூர் சாலை, வடக்கு மாதவி ரோடு பகுதியில் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றம்
பெரம்பலூர் அருகே குரும்பாபாளையம் கிராமத்தில் மதுர காளியம்மன் தேர்த்திருவிழா நடைபெற்றது
பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் கோவில் நிலம் குத்தகை (ஏலம்) விடப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட அசூர், ஆய்க்குடி, நெய்குப்பை, கை.களத்தூர், வெங்கலம் உட்பட பல்வேறு கிராமங்களில் கோவில் திருவிழா நடைபெற்றது.
ரோட்டரி சங்கம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம்