144 directive in force at Perambalur!

பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 பிரிவு 144இன் கீழான உத்தரவு நடைமுறைக்கு வந்தது.

கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தீவிர நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் தனிமைப்படுத்துதல் (Social Distancing) என்ற முறையை தீவிரப்படுத்திடவும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்திடவும் தொற்றுநோய்கள்சட்டம், 1897 ஷரத்து 2 இன் படி சில கட்டுப்பாடுகளை விதித்து ஆணையிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது வீட்டிலேயே இருத்தல் வேண்டும். அத்தியாவசிய பணிகளுக்கு வெளியே வரும்பட்சத்தில் தனிமைபடுத்துதல் நிர்ணயிக்கப்பட்ட தூர அளவான 1 மீட்டர் அல்லது 3 அடி அளவினை கடைபிடித்தல் வேண்டும்.

பொதுஇடங்ககளில் 5 நபர்கள் மேல் எக்காரணத்திற்காகவும் கூடுவது தடை செய்யப்படுகிறது.

3. அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், டாஸ்மாக்கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் (உரிய அனுமதி பெற்றுள்ளவற்றினை தவிர)

4.அனைத்து அரசுஅலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் (உரிய அனுமதி பெற்றுள்ளவற்றினை தவிர)

5.பொதுபோக்குவரத்துகள், அனைத்து தனியார் பேருந்துகள், ஒப்பந்த பேருந்துகள், மாநில போக்குவரத்துகழக பேருந்துகள், வாடகை கார்கள், ஆட்டோரிக்ஷா, ஷேர் ஆட்டோ, அரசு மற்றும் தனியார் குளிர் சாதன வசதி கொண்ட பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்திற்கும் தடைசெய்யப்படுகிறது.

6. மாவட்டங்களுகிடையேயான மற்றும் மாநிலங்களுக்கிடையேயான பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தடை செய்யப்படுகிறது.

ஆகவே, பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களால் மேலும் நோய் தொற்று பரவாமல் தீவிர நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அரசு உத்தரவின் படி, குற்றவியல் நடைமுறைச்சட்டம் 1973 பிரிவு 144 இன் கீழ் மேற்காணும் கட்டுப்பாடுகள் விதித்து ஆணையிடப்படுகிறது.

இந்த உத்தரவு 24.03.2020 மாலை06.00 மணி முதல் 01.04.2020 காலை 06.00 வரை அமுலில் இருக்கும், என அந்த உத்திரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் பெரம்பலூரில் மாவட்ட எல்லைகளான அரியலூர் – பெரம்பலூர் சாலை அல்லிநகரத்திலும், கடலூர் -பெரம்பலூர் மாவட்ட எல்லையான திட்டக்குடி – அகரம்சீகூர், திருவாளந்துறை சுங்கசாவடி, சேலம் – பெரம்பலூர் எல்லையான உடும்பியம், திருச்சி – பெரம்பலூர் எல்லையான பாடாலூர், துறையூர் (திருச்சி) – பெரம்பலூர் எல்லையான அடைக்கம்பட்டி ஆகிய ஊர்கள் அடைக்கப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

2ம் நம்பர் தொழில்கள் அனைத்தும் முடக்ப்பட்டு அத்தியாவசிய பொருட்கள், மருத்துமனைகள், மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன.

மாலை 6 மணிக்கு முன்பிருந்தே வழித்தடங்களில் போக்குவரத்து மெல்ல மெல்ல நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் கிடைக்கும் வாகனங்களை பிடித்து வீடுகளை அடைந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!