15 pounds 50 thousand robbery in a locked house in Perambalur.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே சூப்பர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (65). பி.எஸ்.என்.எல்-லில் சூப்பிரண்டாக வேலை செய்து ஓய்வு பெற்றவர். இன்று காலை சுமார் 9.30 மணிக்கு, தனது சொந்த ஊரான அம்மாபாளையத்தில் உள்ள வயலுக்கு அவரது மனைவி தனலட்சுமியுடன் சென்று விட்டு இன்று மாலை சுமார் 4.30 மணிக்கு வந்து பார்த்த போது வீட்டு கதவின் பூட்டை உடைத்து, பீரோவை திறந்து அதில் இருந்த 7 பவுன் மதிப்புள்ள தாலிக்கொடி, செயின் 3 பவுன், நெக்லஸ் 3 பவுன், ஒரு பவுன் மோதிரங்கள் 2 என 15 பவுன் தங்க நகைகளும், ரொக்கம் ரூ. 50 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது,

இது குறித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார், மோப்ப நாய், தடயஅறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!