15 resolutions, including the urgent need to issue ST certificates, were passed in the state meeting of the Tamil Nadu Narikkurwar Federation!

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில், தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம், நிறுவனர் காரை ஆர். சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. இணை ஒருங்கிணைப்பாளர் பி. நம்பியார் வரவேற்றார். தென் இந்திய ஆதிவாசிகள் நலச்சங்க தலைவர் ஆர். ஞானசுந்தரி முன்னிலை வகித்தார். சிறப்பு மாவட்ட பொறுப்பாளர்கள் சென்னை ஜீவா, கிருஷ்ணகிரி சுதிர், கடலூர் ராஜா, சேலம் ரவிச்சந்திரன் மணிகண்டன், சிவகங்கை சுந்தரபாண்டியன், மதுரை பாண்டியராஜ், திருச்சி ரவிச்சந்திரன், டோல்கேட் தங்கமணி, முருகன், செந்தில், புதுக்கோட்டை அறந்தாங்கி முத்துவேல், முத்துசாமி, சின்ராஜ், அரியலூர் ஜெயராணி, தஞ்சாவூர் உளியூர் செந்தில், திருவாரூர் நீடாமங்கலம் வீரமணி, திருப்பூர் முன்னா, முஸ்தபா, வேலூர் குடியாத்தம் ராகுல், பெரம்பலூர் எறையூர் சேகர், சங்கர், மலையபப்ப நகர் சரத்குமார், சரண்ராஜ், ரகு, கூட்ட பொறுப்பாளர்கள் வேலன், சுமர்தா, சரத்குமார், சுதந்திரகுமார், சிரஞ்சீவி, ராம்கி, கலையரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மத்திய அரசால் நரிக்குறவன் என்கிற குருவிக்காரன் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைத்து மத்திய அரசிதழில் வெளியிட்டதை தமிழக அரசு ஊர்ஜிதம் செய்து தமிழகத்தில் 36 வகை பழங்குடியினர் பட்டியலில் திருத்தம் செய்து 37 வதாக நரிக்குறவர்களை பழங்குடியினர் அட்டவணையில் சேர்த்து விரைவில் நரிக்குறவர்களுக்கு எஸ்.டி சாதி சான்றிதழ் , கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடப்பு கல்வியாண்டில் தனியார் கல்லூரியில் படித்துவரும் மாணாக்கர்களுக்கு பழங்குடி சலுகையில் நரிக்குறவர் மாணாக்கர்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

மாவட்ட வாரியாக படித்த பழங்குடி நரிக்குறவர்களுக்கு தனி கூட்டம் ஏற்பாடு செய்து படிப்புக்கேற்ற, தகுதிக் கேற்ற வேலை வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு வரை மாவட்டம் தோறும் நிரந்தர உண்டு உறைவிட பள்ளி அமைக்க வேண்டும். தொழில் தொடங்க மணிமாலை சொசைட்டி அமைக்க ஏற்பாடு செய்து, அதற்கு அதிகபட்ச மானிய தொகையாக தனி நபருக்கு ரூ. 2 லட்சம் ரூபாய் மானிய கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நரிக்குறவர்கள் தொழில் முன்னேற்றம் அடைய தமிழகத்தில் இருக்கின்ற 528 பேரூராட்சி 148 நகராட்சி 21 மாநகராட்சி சுற்றுலாத்தலம் 11 ஆக மொத்தம் 798 இடங்களில் தலா இரண்டு கடைகள் வீதம் பழங்குடி நரிக்குறவர்கள் சமூகத்திற்கு கடை ஒதுக்கி செய்து கொடுத்தால் 1596 குடும்பங்கள் நிரந்தரமாக தங்கி தொழில் செய்து பிழைக்க வழிவகுக்கும், பிள்ளைகளையும் ஓரிடத்தில் தங்க வைத்து படிக்க வைப்பார்கள். உணவுக்காக ஓரிடத்தில் தங்காமல் ஊர் ஊராக சென்று பசி பிழைப்புக்காக அலையும் நிலையும் மாறும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

நாள் முழுவதும் அன்னதானம் திட்டத்தின் கீழ் இயங்கும் பிரசித்தி பெற்ற இந்து அறநிலத்துறைக்கு கட்டுபட்டுள்ள கோவில்களில், நரிக்குறவர் செய்யும் ஆபரணங்கள் மற்றும் மணிமாலைகள் இதர தொழில் செய்ய 2 கடைகள் வீதம் ஒதுக்கீடு செய்து வழங்கினால் 754 கோவில்களில் 1508 குடும்பங்கள் வளர்ச்சி பெற வாய்ப்பு அதிகம் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கின்றோம்.

விவசாயம் செய்து பிழைக்க விருப்பமுள்ள பழங்குடி நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு புறம்போக்கு மற்றும் தரிசாக இருக்கின்ற நிலம் அல்லது பழங்குடி இன சட்டத்தின்படி விளைநிலமாக இல்லாமல் தரிசாக இருக்கின்ற வனத்துறை நிலமாயினும் தல 5 ஏக்கர் வீதம் கிணறு வெட்டி நீர்ப்பாசனத்துடன் இலவசமாக செய்து கொடுத்தால் பல குடும்பங்களின் வாழ்வில் ஒளி தீபம் ஏற்றியதாக இருக்கும் பழங்குடி நரிக்குறவர்கள் நிரந்தரமாக ஓர் இடத்தில் தங்கி கல்வி பயில்வதற்கு வாய்ப்பாக இருக்கும்.

நரிக்குறவர் இன மக்கள் பல்வேறு இடங்களில் தங்குவதற்கு வீட்டு மனை பட்டா மற்றும் வீடுகள் இல்லாமல் கஷ்டப்படும் குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா மற்றும் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பசுமை வீடு வழங்கிட வேண்டும் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும், வீடு பட்டா இல்லாத நரிக்குறவர் இனத்தை கண்டறிந்து தகவல் பெற்று அதன்படி உரிய நடவடிக்கை எடுத்து தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்,

பொருளாதார ரீதியாக மத்திய மாநில அரசு தொழில் தொடங்குவதற்கு அறிவிக்கின்ற திட்டங்கள் அனைத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அல்லது அரசுத் துறை அதிகாரிகள் நரிக்குறவர் மக்களுக்கு தெரியும்படி செய்தால் அதில் தகுதி உடையவர்கள் நிதி பெற்று வாழ்வதற்கு சரியாக இருக்கும் என கருதுகிறோம்.

பல ஆண்டு காலமாக நிரந்தரமாக தங்கி வாழுகின்ற பஞ்சதாங்கி ஏரி குகை சேலத்தில் குடியிருந்து வரும் 150 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும்.

சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளுவர் மாவட்டங்களில் பல வருடங்களாக குடியிருந்து வரும் நரிக்குறவர்கள் இன மக்களுக்கு நிரந்தரமாக குடியிருக்க வாழும் இடத்திலேயே வீட்டுமனை பட்டா வழங்கி வாழ்வளிக்க வேண்டும்.

நரிக்குறவர் மாணாக்கர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும்போது படிப்புக்காக வங்கியில் கடன் பெற்று திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்படும் மாணாக்கர்களின் கடனை ரத்து செய்ய வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் நமையூர் நரியோடையில் பல ஆண்டு காலமாக குடியிருந்து வரும் நரிக்குறவர்கள் தரிசு நிலத்தில் வரி வாய்தா செலுத்தி நிரந்தரமாக பயிர் செய்து 25 குடும்பம் வாழ்ந்து வருகிறார்கள், நிலத் திற்க்கு டி.கார்டு பட்டா வழங்கி உள்ளார்கள், அதை நிரந்தர நில பட்டாவாக வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

சென்னை சைதாப்பேட்டையில் இயங்கும் சவுத் இந்திய ஷெட்யூல் டிரஸ்டுக்கு சொந்தமான 34 கிரவுண்ட் அரசு புறம்போக்கு நிலத்திநை டாக்டர்.கலைஞரின் 50வது பிறந்தநாள் அன்று பள்ளி விடுதி கட்டிக் கொடுத்து நிலத்தையும் மேற்கண்ட சங்கத்திற்காக கொடுத்தார்.இதில் 3ஆயிரம் படித்து பயன் பெற்றுள்ளனர். ஆனால் அரசு சங்கத்திற்கு இன்று வரை பட்டா கொடுக்காமலும், சுற்று சுவர் கட்ட விடாமலும் தடுத்து வருகிறார்கள், இதனால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதை அரசுக்கு தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், அரசு கூடிய விரைவில் பட்டா கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்வதோடு அப்போதுதான் கட்டிடம் கட்ட முடியும் அரசு மானியம் பெற முடியும். எனவே நரிக்குறவர் இன மக்கள் பழங்குடியினர் சுவாசகாற்றை புதிதாக சுவாசிக்க வந்துள்ளோம், உள்ளாட்சி தேர்தல்களில் தனி இடஒதுக்கீடு நரிக்குறவர் அதிகம் வசிக்கும் ஏற்படுத்தி தரவேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது,

தீர்மானங்களை, சென்னை சேப்பாக்கத்தில், பழங்குடியினர் நல இயக்குனரகத்தில் வழங்கினர். துணை ஒருங்கிணைப்பாளர் திருப்பத்தூர் எஸ். பொன்னையன் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!