16 gold chains flush with 2 women in different incidents near Perambalur! Fracture to the leader who tried to prevent !!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள புஜங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்த பூபதி மனைவி சுமதி (46) என்பவர் மாட்டுப்பட்டி அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த 3 மர்ம நபர்கள் கட்டையை காட்டி மிரட்டி, 7.5 பவுன் தாலிசெயின், 1.5 பவுன் டாலர் செயின் ஆகியவற்றை பறித்து சென்றனர். அதே கிராமத்தை ஒட்டிய ஜமீன் பேரையூரில், போலீசார் புஜங்ராயநல்லூர் சுமதியிடம் விசாரணை நடத்தி கொண்டிருக்கும் போதே ஜமீன்பேரையூர் தலைவர் மோகன் மனைவி ராணியிடம் 7 பவுன் தாலி தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதனை தலைவர் மோகன் தடுக்க முயன்ற போது கொள்ளையர்கள் தாக்கியதில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அரியலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த இரு கொள்ளை குறித்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போன்று தொடர்ந்து நடந்து வரும் வழிப்பறி சம்பவங்களால், பெண்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.