18 people, including a special police assistant inspector in Perambalur, have been diagnosed with covid-19 infection.

பெரம்பலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெண் தலைமைக் காவலர் இருவர் உள்பட 18 நபர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்யும் பணியில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 322 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 18 பேர் பாதிக்கப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை 340ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள அரணாரை, துறைமங்கலம், லாடபுரம், வேப்பந்தட்டை, பூலாம்பாடி , அடைக்கம்பட்டி, விஜயபோபாலபுரம், காருகுடி, கீழப்புலீயூர், லப்பைக்குடிக்காடு ஆகிய பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் தீவர தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு பணிகளை செய்து வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!