பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையின் இருபுறமும் தலா சுமார் 8.கி.மீ தூரம் கோன ஆற்றிற்கு மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது. இது கோனரி ஆற்றிற்கு கிழக்கே 4 கி.மீ தூரம் பெரம்பலூர் வரையிலும், மேற்கே எசனை வரை 4 கி.மீ தூரமும் சாலையின் இருபுறமும் மழை நீர்வரத்து வாய்க்கால் உள்ளது.
இதனை சமீப காலமாக ஆங்காங்கே தோன்றும் வணிக நிறுவனங்கள், வீடுகள் மற்றும் வீட்டு மனைகளால் மண் கொண்டப்பட்டு தூற்றப்படுகிறது. அரசு மழைநீரை சேகரிக்கவும், கால்வாய்கள் மூலம் தண்ணீர் சேகரிக்கவும் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து வருகின்றது.
நன்றாக இருக்கின்ற கால்வாயை தங்களின் சுயலாபத்திற்காக கால்வாய் அழித்தும், மண், கல் போன்றவற்றை இட்டும் தூற்றுவதால் மழைக் காலத்தில் வௌ;ளம் வரும் போது தண்ணீர் வடியாமல் வீடு பகுதிகளுக்கு செல்லும் நிலை ஏற்படும். எனவே, கால்வாயை தாண்டி செல்வோர்கள் முறையாக பாலம் அமைத்தே கால்வாயை கடந்து செல்ல அறிவுறுத்த வேண்டும்.
இது போல் கால்வாயை தூற்றுபவகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அதற்குண்டான சீர் சிருத்த செலவையும், அபராதமும் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.
மாவட்ட கலெக்டர் மாவட்டம் முழுவதும் உள்ள நீர்வரத்து கால்வாய்கள், ஏரி,குட்டை போன்ற நீர் நில ஆக்கிரமிரப்புகளை அகற்றி மழைகாலங்களில் உரிய மழை தண்ணீரை சேகரித்து நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவாரின் எதிர்பார்ப்பாக உள்ளது.